வெள்ளி, 2 டிசம்பர், 2011

en manathai varutiya kathal kavithaikal

ஊர் கூடும் வேளையில் உன்
கழுத்தில் நான் மாலை சூட
வேண்டும் என்று நினைத்தேன் .....

நீயோ ஊர் கூடி எனக்கு
மாலை சூட ஆசை படுகிறாய்....

நிஜமாக நீ நிருந்தால் உன்
நிழலாக நான் இருப்பேன் ...

எங்கிருந்தாலும் நீ நலமுடன்
வாழ்க .....

அதோ தெரிகிறது அன்பு  

அன்பின் திரிபுகளை எண்ணிக் கிடந்தான்,
பெருங் காய்ச்சல் கண்ட ஒரு நாளில்.
தன்னிடமே கேட்டான் வாழ்க்கை கேள்வி ஒன்று.

‘கலப்படம் இல்லா அன்பு எங்கே?'

மதிய உணவு வேளையும் வந்து போனது; விடை வரவில்லை.

ரொட்டித் துண்டை புறந்தள்ளி,
தானும் காய்ந்து கிடந்தது அங்கொன்று.
தாய்மை, நட்பு, பக்தி எல்லாம் கலந்து அவனையே பார்த்தபடி, அவனது நாய்.

விடை மட்டுமல்ல, கடவுளும் கிடைத்தார் அந்தக் கண்களில்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக